Description
Price: ₹500.00
(as of Dec 16,2022 23:42:21 UTC – Details)
பள்ளிக்கல்வி துறை தேர்வுக்கான Test Code 065 and 072 என்ற இரண்டின் தேர்வு முறையும் அண்மையில் சீரமைத்து (Revised) வெளியிடப்பட்டது. இதன்படி மேற்கண்ட தேர்வுகள் இரண்டிலும் 100 விழுக்காடு கொள்குறி வினாக்களே வினவப்படுகின்றன. முந்தைய தேர்வு முறையின்படி 20 விழுக்காடு மதிப்பெண்களுக்கு புத்தகம் பார்த்து எழுதும் விரிவாக விடையளித்தல் பகுதி தற்போது இல்லை. 2022-இல் வெளியாகி இருக்கும் இப்புதிய பதிப்பில் மே 2017, மே 2018, டிசம்பர் 2018, மே 2019, பிப்ரவரி 2021, ஆகஸ்ட் 2021, மே 2021, பிப்ரவரி 2022 ஆகிய காலகட்டங்களில் நடந்த தாள் I மற்றும் II-கான (Paper I and II) தேர்வுகளின் கொள்குறி வினாக்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் விடைகளுடன் (மே 2017 தவிர) தரப்பட்டுள்ளன. இவை மட்டுமல்லாது, பள்ளிக்கல்வித் துறை பிறப்பித்ததும், மேற்சொன்ன தேர்வுகளுக்கு பயன் தருவதுமான பல்வேறு அரசாணைகள் இப்புத்தகத்தில் தரப்பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக பள்ளிக்கல்வி தொடர்பாக பல்வேறு தலைப்புகளின் கீழ் சிறு குறிப்புகள் தரப்பட்டிருப்பது, தேர்வெழுதும் ஆசிரியர்களுக்கு தங்கள் துறை சார்த்த ஒரு நல்ல புரிதலை ஏற்படுத்துகிறது என்று சொன்னால் அது மிகையன்று. முத்தாய்ப்பாக இப்புத்தகத்தின் இறுதியில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 மற்றும் அதன் கீழ் 2011-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட விதிகளும், அச்சட்டம் தொடர்பான அரசாணைகளும் தரப்பட்டிருப்பது இப்புத்தகத்தை முழுமையான ஒன்றாக்குகிறது. பள்ளிக்கல்வி துறை தொடர்பான மேற்படி தேர்வுகள் எழுதும் ஆசிரியர்களுக்கு இப்புத்தகம் ஓர் வரப்பிரசாதம் என்ற கூற வேண்டும். நல்வாழ்த்துகளுடன்
ASIN : B09XC5W2N4
Publisher : ATC Law Books; Revised Pattern Edition (1 January 2022)
Paperback : 434 pages
Reading age : 3 years and up
Item Weight : 550 g
Country of Origin : India
Reviews
There are no reviews yet.